×
 

#BREAKING: துரத்தி துரத்தி காதல் தொல்லை… 12 ஆம் வகுப்பு மாணவியை குத்திக் கொலை செய்த கொடூரம்…!

ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கொடூரமான போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஒரு பெண் தன்னைக் காதலிக்க மறுத்தால், அந்த மறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத இளைஞர்கள் அவளையே உயிரோடு கொலை செய்துவிடுகிறார்கள். இது வெறும் “காதல் தோல்வி” என்று சுருக்கிவிட முடியாத அளவுக்கு ஆழமான சமூக, உளவியல், பாலியல் பிரச்சனைகளின் வெளிப்பாடு.இந்தக் கொலைகள் பெரும்பாலும் இரண்டு வகையாக நிகழ்கின்றன. 

ஒன்று, நீண்ட நாட்கள் ஒருதலைப்பட்சமாகக் காதலித்து, “ஏத்துக்கலைனா செத்துப் போயிடுவேன்” என்று மிரட்டியவன், மறுக்கப்பட்டதும் பெண்ணையே கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்வது. மற்றொன்று, கொலை செய்துவிட்டு தப்பி ஓடுவது அல்லது சரணடைவது. இரண்டிலுமே பெண்ணின் உயிர்தான் பலிகடா ஆகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான இதுபோன்ற கொலைகள் நடந்திருக்கின்றன. 

சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி என எந்த மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை இந்தக் கொடூரம். பெரும்பாலான கொலையாளிகள் 20 முதல் 30 வயதுக்குள்ளான இளைஞர்கள். பெரும்பான்மையாக கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், சிறு வியாபாரிகள். அவர்களில் பலர் பெண்ணை நேரடியாகக் காதலித்ததே இல்லை. சாலையில் பார்த்து, பேஸ்புக்கில் பார்த்து, ஒருதலையாக “காதலித்து” வந்தவர்கள். இந்தக் கொலைகளின் பின்னணியில் ஒரு பொதுவான உளவியல் இருக்கிறது.

இதையும் படிங்க: நடுரோட்டில் சண்டை... காதலி முன்னே தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... நடுங்க வைக்கும் காட்சிகள்...!

என்னை ஏத்துக்கலைனா வேற யாரையும் ஏத்துக்கக்கூடாது என்ற ஆணாதிக்க எண்ணம். பெண்ணை ஒரு மனிதனாக அல்ல, தனக்குச் சொந்தமான பொருளாகப் பார்க்கும் மனநிலை. அவள் இல்லை என்று சொல்வதை தனது ஆண்மைக்கு ஏற்பட்ட அவமானமாக உணர்கிறான். அந்த அவமானத்தைத் துடைத்தெறிய ஒரே வழி அவளைக் கொல்வதுதான் என்று நினைக்கிறான்.

அப்படியாக ஒரு கொடூர நிகழ்வு ராமேஸ்வரத்தில் நிகழ்ந்துள்ளது. காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொன்ற சேரல்கோட்டையைச் சேர்ந்த முனிராஜ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு துரத்தி துரத்தி தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

இதையும் படிங்க: கைதான 30 ராமேஸ்வரம் மீனவர்கள்... இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share