×
 

LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் இதுதான் நடக்கும்..!! தமிழ்நாடு அரசு வார்னிங்..!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை முன்னிட்டு, மாநில அரசு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு விநியோக சங்கிலி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வணிக நோக்கிலான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்களின் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வணிக சிலிண்டர்கள் போதுமான அளவில் கிடைக்காததால், சிறிய உணவகங்கள், டீக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர்களை வாங்கி வணிக நோக்கில் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியான தேவைகளுக்குப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கி வைப்பது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற செயல்கள் கடும் குற்றமாகக் கருதப்படும் என்றும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்:தமிழ்நாடு அரசு சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு பள்ளி - கல்லூரி மாணவர் விடுதிகள், காலை சிற்றுண்டி மையங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றன.உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. நாளை முதல் இந்த உயர்த்தப்பட்ட அளவில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பான புகார்கள்:சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால், அவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள்:தற்போதைய சூழலில் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தேவையான அளவுக்கு மட்டும் சிலிண்டர் முன்பதிவு செய்யுமாறும், பதுக்கல் அல்லது கருப்பு சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக சிரமத்தை விரைவில் சரி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
 

இதையும் படிங்க: வேகமெடுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் பிரச்சினை..!! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share