டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடக, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல் லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1,000 எஸ்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளது. சுமார் 50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. ஐ.ஓ.சி. நிலுவையில் உள்ள வாடகை தொகையை லாரி உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இ மெயில் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஐ.ஓ.சி நிறுவனம் வாடகை பாக்கியை வழங்காததால் இன்று காலை முதல் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு இயக்கப்படும் 1,000 எல் பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதாக தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்து இருந்தார். இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் மேலும் அதிகரித்தது.
இதையும் படிங்க: கியாஸ் தட்டுப்பாடு..! தி.நகரில் 2 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..!
இந்த நிலையில் தென்பண்டலை எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. மூன்று மாதத்திற்கு மேலாக வாடகை 50 கோடி ரூபாயை வழங்கவில்லை எனக் கூறி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: எல்.பி.ஜி. உற்பத்தியில் இந்தியா சாதனை!ஒரு மாதத்தில் 60 சதவீதமாக உயர்ந்த உள்நாட்டு உற்பத்தி!