ஆட்டோ பார்க்கிங் காரால் நேர்ந்த கொடூரம்... உயிருக்கு போராடும் கார் உரிமையாளர் - நடந்தது என்ன?
சொகுசு காரின் ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் செயல் இழந்ததால் உரிமையாளர் மீது மோதி விபத்து. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு காரின் ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் செயல் இழந்ததால் உரிமையாளர் மீது மோதி விபத்து. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானாகவே இயங்கி ஒரு இடத்தில் பார்க்கிங் செய்யும் வசதி தற்போது வரும் புதிய சொகுசு கார்களில் அமைக்கப்பட்டுள்ளது அது போன்ற ஒரு சொகுசுக் காரின் ஆட்டோ பார்க்கிங் செயலிழந்து உரிமையாளர் மீது ஏறியதில் ஒரு காபத்தான நிலையில் அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர் திருப்பூர் அண்ணா நகர் பகுதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் புதிய ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ள சொகுசு காரை வாங்கி உள்ளார். அதன் மூலம் தனது நிறுவனத்தில் பலமுறை காரை ஆட்டோ பார்க்கிங் வசதியில் தானாகவே இயங்கும் வகையில் நிறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!
நேற்று முன்தினம் இவர் தனது நிறுவனத்தில் சரிவான இடத்தில் காரை நிறுத்தி ஆட்டோ பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார். கதவு திறந்திருந்த நிலையில் கார் தானாகவே பின்னோக்கி சென்றது இதனைத் தொடர்ந்து அவர் காரை நிறுத்த முயன்றுள்ளார் ஆனால் கார் கதவு அவர் மீது வேகமாக மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காலில் கார் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காரை நிறுத்தி செந்தில்குமாரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த கார்; 6 மாணவ, மாணவிகளின் நிலை என்ன?