×
 

எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி பதிலடி... திட்டங்களை லிஸ்ட் போட்டு தெறிக்க விட்ட ம.சு...!

கலைஞர் ஆட்சியில் 13.12% எட்டி அதிமுக ஆட்சி காலத்தில் 6%, என சுமார் 10 ஆண்டுகள் அதல பாதாளத்தில் இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 11.19% எட்டியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்புக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார். தான் காலம் கடந்து இந்த கூட்டத்திற்கு வந்ததற்கு வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டு கொள்கிறேன் எனவும், இன்று துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்றும், பல்வேறு வழக்குகளால் கடந்த 2ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் செவிலியர் பணியிடங்களுக்காக 1231 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார் எனவும், முதன் முதலில் பணியில் சேரும் போதே கலந்தாய்வு மூலம் பணியிடம் நிரப்பப்பட்டது என தெரிவித்தார். மேலும் மாலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 504பயனாளிகளுக்கு வீடுகளை துணை முதலமைச்சர் வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது எனவும், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் சற்று தாமதம் ஏற்பட்டது என்றார். 2சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே 1971 நிர்வாகிகளை அடையாளம் கண்டு அவர்களது பெயர்களை பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர் எனவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் தான் உட்பட மற்ற மாவட்ட செயலாளர்கள் பொறாமை கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாகவே 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் என முழங்கி வருகிறோம் எனவும், இதனை கண்டு சிலர் இவர்களுக்கு அதீத நம்பிக்கை என சிலர் விமர்சிக்கின்றனர் எனவும், ஆனால் இது விஞ்ஞான பூர்வ அறிவிப்பு என தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, 221 தொகுதிகளில் திமுக கூட்டணி கூடுதல் வாக்குகளை பெற்றது எனவும், இதன் மூலம் 200 தொகுதிகளை வெல்வோம் என கூறுவதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 13 தொகுதிகளில் மட்டுமே வாக்குகளை குறைவாக பெற்றது எனவும், தற்போது எடப்பாடி பழனிசாமி ஆங்காங்கே பேனர் வைத்து மக்களை அழைத்து வந்து பேசுகிறார் எனவும், 2000, 3000 பேர் மட்டுமே வாக்களித்து ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட முடியுமா, டெபாசிட் கூட வாங்க முடியுமா என வினவிய அமைச்சர் மா.சு, தற்போது வீர வசனம் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அதிமுக கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே கூடுதல் வாக்குகளை பெற்றது எனவும், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் எஞ்சிய 5 தொகுதிகளில் திமுகவை விட கூடுதல் வாக்குகளை பெற்றதாக கூறினார்.

இதையும் படிங்க: கதறும் சீனியர்கள்... பதறும் கூட்டணி கட்சிகள்... உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்காக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

முதலமைச்சரின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் மாதந்தோறும் 1000ரூபாய் பெற்று வருவதாகவும், தற்போது வரையில் ஒவ்வொரு மகளிரும் 25000ரூபாய் பெற்று பயனடைந்துள்ளனர் என பெருமிதம் தெரிவித்தார். விடுபட்ட அனைவருக்கும் விரைவில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றும் தமிழ்நாட்டை பின்பற்றி பல மாநிலங்கள் இதே வாக்குறுதியை அறிவித்த நிலையில் மற்ற மாநிலங்கள் முறையாக செயல்படுத்த முடியாமல் உள்ளதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

விடியல் பயண திட்டத்தின் மூலம் தினந்தோறும் 65லட்சம் பயணங்கள் நடைபெற்று வருகிறது என்றும் இதன் மூலம் மகளிர் மாதந்தோறும் 888 ரூபாய் சேமிக்கின்றனர் என கூறினார். முதமைச்சரின் முத்தாய்ப்பு திட்டமான காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்கள் மட்டுமின்றி, சில நாடுகளும் பின்பற்றி வருகின்றன என பெருமிதம் தெரிவித்தார்.

70 வயதை கடந்த முதியோர், மாற்று திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து மாதந்தோறும் ரூபாய் 2000 வழங்கி வருகிறார் எனவும், 7 வயது குழந்தைகளுக்கு நாம் நிதி அளிக்கிறோம், அவர்கள் நமக்கு 2026ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று திட்டத்தை செயல்படுத்தவில்லை என முதலமைச்சர் தெரிவித்ததை அமைச்சர் மா.சு. நினைவு கூர்ந்தார்.

கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12% எட்டியது எனவும், அதன் பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் சரிந்து 6%, 7% மட்டுமே இருந்தது எனவும், சுமார் 10 ஆண்டுகள் அதல பாதாளத்தில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு 11.19% என பொருளாதார வளர்ச்சியை மீண்டும் முன்னோக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என்றும், இந்திய அளவில் 6.5% மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முதலமைச்சர் சிறப்பான ஆட்சியின் மூலம் உயர்த்தி காட்டியுள்ளதாக தெரிவித்தார். 

உங்களுடன் ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்களின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர் எனவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு கடந்தாண்டு ஐநா சபை பாராட்டி விருது வழங்கியது எனவும், இனி மருத்துவமனைகளுக்கு வருவோரை நோயாளிகள் என அழைக்க கூடாது எனவும், மருத்துவ பயனாளிகள் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளன என தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் குளறுபடி, தொகுதி சீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநித்துவதை குறைக்க அனுமதிக்க மாட்டோம் உட்பட 5 உறுதிமொழிகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் வாசிக்க, கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் கூறினால் மட்டும் தான் பேட்டி என கூறி பதிலளிக்க மறுத்து, செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.

 

.

இதையும் படிங்க: நல்லாருக்கு உங்க நியாயம்! இதுக்கு திமுக காரங்க மேல CASE போட்டீங்களா? வலுக்கும் விமர்சனங்கள்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share