×
 

பொண்டாட்டி... நீ அவ்ளோ அழகு.! இதுவும் மிரட்டலா ரங்கராஜ்? வீடியோ போட்டு ஜாய் ரிசல்டா கேள்வி...!

ஜாய் கிரிசல்டா வீடியோ ஒன்றை வெளியிட்டு இது தான் மிரட்டலா என கேள்வி எழுப்பினார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு விழாக்களில் தனது சமையல் கலையால் புகழ் பெற்றவர் ரங்கராஜ். 2019-ல் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், பின்னர் பென்குயின் போன்ற படங்களிலும் நடித்தார்.

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றி, மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். இந்தச் சூழலில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தார்.

இந்தப் புகைப்படங்களில், ரங்கராஜ் ஜாய்க்கு குங்குமம் இடுவது மற்றும் இருவரும் மாலை அணிந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தத் திருமணம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தபோது, ஜாய் கிரிஸில்டா 2025 ஆகஸ்ட் 29 அன்று சென்னை காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார்.

இதையும் படிங்க: என்னை ஏமாத்திட்டாரு! ஜாய் கிரிசில்டாவின் திருமண மோசடி புகார்... மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜர்

இதை அடுத்து மகளிர் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டதாக மாதப்பட்டி ரங்கராஜ் புகார் தெரிவித்தார். இதற்கிடையில் வீடியோ ஒன்றை ஜாய் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா Mr husband என்ற கேள்வி எழுப்பினார். இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா என சொல்லுங்க மக்களே என்று தெரிவித்தார். கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி என்றும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: முஸ்லிம் கணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! குரானை சுட்டிக்காட்டி செக் வைத்த ஹைகோர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share