முதல்வர் விஜய்க்கு அடுத்த தலைவலி... கட்சிக்காக மின் கம்பியில் கொக்கி போட்ட குமாரு... தவெகவை அசிங்கப்படுத்திய நிர்வாகி...!
தவெக கூட்டத்திற்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு திருட்டு தனமாக மின் திருட்டு? மதுராந்தகம் தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
மதுராந்தகம் சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பங்கேற்கும் தவெக விழா: மின் திருட்டு சர்ச்சையால் பரபரப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின்மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவிற்கு பிரம்மாண்ட விழா ஏற்பாடுகளுக்காக, மின் கம்பத்தில் இருந்து முறையற்ற வகையில் மின்சாரம் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இதனையொட்டி, சுமார் 20,000 நபர்களைக் கட்சியில் இணைக்கும் வகையில் பிரம்மாண்ட விழா ஒன்று நாளை நடைபெற உள்ளது.இதில்
ஆதவ் அர்ஜுனாஉள்பட பல அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!
இந்நிலையில் இந்த விழாவிற்காக மேடை அமைத்தல் பேனர்கள் வைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள பொது மின் கம்பத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரிய அனுமதியின்றி நேரடியாகக் கொக்கி போட்டு திருட்டுத் தனமாக மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
முறையற்ற வகையில் மின்சாரத்தைத் திருடி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிர்வாகிகள் மீது, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் படிங்க: தொடர் மின்வெட்டால் தவிக்கும் சென்னை மக்கள்..!! காரணம் சொல்லும் மின்வாரியம்..!! என்ன தெரியுமா..??