சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகளை நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நீதித்துறை நிர்வாகத்தை விரைவுபடுத்தவும், நிலுவையில் உள்ள வழக்குகளைச் சீக்கிரமாக விசாரித்து முடிக்கவும் ஏதுவாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்டுள்ள 15 புதிய நீதிபதிகளில் 8 பேர் வழக்கறிஞர்கள் பிரிவிலிருந்தும், 7 பேர் மாவட்ட நீதிபதிகள் பிரிவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் பிரிவில் இருந்து என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ஆர்.ஆர். விவேகானந்தன், எஸ். ரவிக்குமார், என். திலீப்குமார், ஏ. மனோகரன், கே. கோவிந்தராஜன் மற்றும் ரஜ்னீஷ் பத்தியில் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி வந்த பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள் சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன் மற்றும் என். குணசேகரன் ஆகிய 7 பேர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!
இந்த 15 புதிய நீதிபதிகளின் நியமனத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்தமுள்ள 75 நீதிபதி பணியிடங்களில், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் அரசு vs DMK..!! கைதாக முடியாது... உதயநிதி ஸ்டாலின் ஹைகோர்ட்டில் முறையீடு..!!