×
 

விசாரிச்சு தான் சாதி சான்றிதழ் குடுக்கணும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் செக்..!

உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாதி சான்றிதழ் உண்மை தன்மை விசாரணையை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிட கோரி பேங்க் ஆப் பரோடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏடி சந்திரா தமிழக அரசுக்கு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். 

முழு விசாரணைக்கு பிறகு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக பட்டியலின, பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கவரும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அண்ணா பல்கலை. வழக்கு..! சிபிஐக்கு மாற்ற அவசியமே இல்லை.. டிஜிபி விளக்கம்..!

மேலும் சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசின் தலையில் இடியை இறக்கிய ஐகோர்ட்.. ரூ.50 லட்சம் ஃபைன் போட்ட சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share