×
 

அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் திமுக தலைவர்களை களங்கப்படுத்தும் வகையில் அவதூறான பதிவுகள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பல இணையப் பக்கங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் அவதூறு உள்ளடக்கங்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 19 புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றின் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட போது, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்பட வாய்ப்புள்ளதால், காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஆதாரங்கள் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், சில கட்சிகள் அல்லது அமைப்புகளுக்கு எதிரான புகார்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை, திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்களில் அதே விரைவுடன் செயல்படாதது பாரபட்சமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

எனவே இந்த புகார்களின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த தேதிக்கு தள்ளி வைத்துள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு பாகிஸ்தான் இன்ப்ளூயன்ஸர்கள் ஆதரவு? மத்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share