×
 

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள்... நவ. 1 வரை கெடு..! ஹைகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் கடைகள் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதற்குரிய விதிகளின்படி பெயர்ப் பலகையில் தமிழ் மொழி முதன்மையாகவும் பெரிய எழுத்தில் இடம்பெற வேண்டும். அதற்கு அடுத்து ஆங்கிலம் மற்றும் தேவைப்பட்டால் பிற மொழிகளும் இடம்பெறலாம். இந்த விதியை முறையாக அமல்படுத்தும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து கடைகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழில் பெயர்ப் பலகைகளை மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டன. தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பல வியாபாரிகள் உடனடியாக பலகைகளை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிலர் செலவு அதிகம் என்றும், தயாரிப்புக்கு நேரம் தேவை என்றும் காரணம் காட்டி கால அவகாசம் கோரினர்.இந்த நிலையில் சில்லறை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் மே மாத இறுதிக்குள் பலகைகளை மாற்றுவது கடினம் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் பெரும் சிரமம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து, அவகாசம் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தது.இந்த உத்தரவு தமிழ் மொழியின் முதன்மையை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் வியாபாரிகளின் நடைமுறை சிக்கல்களையும் கருத்தில் கொண்டதாக அமைந்தது.

இதையும் படிங்க: CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

தமிழக அரசின் இருமொழிக் கொள்கையின் அடிப்படையில் பெயர்ப் பலகைகளில் தமிழ் முன்னிலை பெற வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அபராதத் தொகை முன்பு குறைவாக இருந்த நிலையில் பின்னர் உயர்த்தப்பட்டது. இதனால் விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

L

 

இதையும் படிங்க: விஜய் பிரதமர் ஆவாரா?... “அதை யாரும் தடுக்க முடியாது”... அதிமுக மாஜி கொடுத்த அதிரடி பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share