×
 

“ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

மதுரை மீனாட்சி யம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுடைய சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று 11 வது நாள் அதாவது இன்று சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்க நிகழ்வுகளில் ஒன்றான 11 வது நாள் நிகழ்வான திருதேரோட்டம் என்பது சற்று முன்னதாக  துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரை என்றாலே சித்திரை திருவிழா மதுரை அன்னை மீனாட்சியின் ஞாபகம் தான் அனைவருக்கும் வரும். அதனை போலதான் தற்போது இந்த சித்திரை திருவிழா வழக்கம் போல கோலாகாலமாக கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் மாசி வீதிகளிலும் வெளி வீதிகளிலும் இரவு நேரங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திக்கு விஜயம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை மீனாட்சி சொக்கநாதருடைய திருக்கல்யாணம் மிக விமர்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கக்கூடிய வகையில் மிக விமர்சியாக நடைபெற்றது.

 இந்நிகழ்வை முடித்து நேற்று இரவு இருவரும் அதாவது புதுமண தம்பதிகளான மீனாட்சியும் சொக்கநாதரும் மாசி வீதிகளில் உலா வந்து  அருள்பாலித்தனர்.இதனை தொடர்ந்துதான் திருகல்யாணத்தை முடித்து தற்போது மீனாட்சியும் சொக்கநாதரும் தனித்தனி தேர்களில்  மதுரை மாசி வீதிகளில் வலம் வவந்தனர்.  குறிப்பாக இந்த தேரோட்டம் என்பது கீழ மாசி வீதி தேர் முட்டியில் இருந்து துவங்கும் இந்த தேருக்கு வருவதற்கு முன்பாக மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆராதனைகள் திருக்கோவிலிருந்து மாசி வீதிக்குகொண்டுவரப்பட்டது. மீனாட்சியும் சொக்கநாதரும் தனிச்சனி தேர்களில் வைத்து அலங்காரங்கள் முடித்து அபிஷேகங்கள் நடைபெற்று தற்போது தேரோட்டம் என்பது துவங்கி உள்ளது. 

இந்த தேர் என்பது சரியாக 6:35 மணிக்கு துவங்கியது. கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மசி வீதி என்று நான்கு மாசி வீதிகளிலும் இந்த தேர் என்பது வளம் வரும். இந்த தேரை பொறுத்தவரை இரண்டு தேர்கள் பெரிய தேரில்  சொக்கநாதரும் சின்ன தேரில் மீனாட்சியும் அமர்ந்துள்ளனர். இந்த இரண்டு தேர்களையும் பக்தர்கள் “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தர” என்ற கோசம் விண்ணை பிளக்க அளவிற்கு வடம் என்று சொல்லக்கூடிய அந்த கயிரை பிடித்து இழுக்க துவங்கியுள்ளனர். இரண்டு தேர்களும் தற்போது கீழமாசி வீதியிலிருந்து மேல மாசி வீதி வழியாக செல்வதற்கு தற்போது வெளியே வந்துள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

இந்த நிகழ்வை காண்வதற்காக மதுரை மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அன்னை மீனாட்சியின் அருள் பெறுவதற்காக பக்தர்கள் தற்போது நான்கு மாசி வீதிகளிலும் குவிய துவங்கியுள்ளனர்.  மதுரை மாநகர் மட்டுமல்லாமல் அருகில் உள்ள விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இந்த நான்கு மாசி வீதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டு போக்குவரத்தைகள் சீர் செய்யப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share