×
 

கள்ளழகரை குளிர்விக்கும் தோல் பை... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா... யாருமே அறியாத பின்னணி...!

க்தி மற்றும் பண்பாட்டுடன் இணைந்ததாக இருப்பதால், லாப நோக்கில் அல்லாது கடமையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மே ஒன்றாம் தேதி சித்திரையின் நாயகனாக அழைக்கப்படக்கூடிய அழகர் பெருமாள் ஆழ்வார்புரம் பகுதியில் லட்சோப லட்சம் மக்கள் மத்தியில் எழுந்தருள உள்ள நிலையிலே அந்த அழகரோடு வரக்கூடிய பக்தர்களை குளிர்விக்கும்  வண்ணமாக அந்த ஆட்டுத் தோலில் தயார் செய்யக்கூடிய அந்த தோல் பை விற்பனையானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கக்கூடிய தேரடி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த தோல் பையை விற்பனை செய்யக்கூடியவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? என்ன மாதிரியான பையை தயார் செய்கிறார்கள் என பார்க்கலாம். 
 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, சின்ன காரியாபட்டி மற்றும் காமராஜர் காலனி பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் தலைமுறைகளாக மேற்கொண்டு வரும் ஒரு தனித்துவமான பாரம்பரிய தொழில் இன்றும் தொடர்கிறது. இந்த தொழிலை அவர்கள் தாத்தா, பாட்டன் காலத்திலிருந்து தொடர்ந்து செய்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தொழில், பக்தி மற்றும் பண்பாட்டுடன் இணைந்ததாக இருப்பதால், லாப நோக்கில் அல்லாது கடமையாகவே அவர்கள் பார்க்கின்றனர். “பகவானுக்கு சேவை செய்வதற்காகத்தான் இந்த வேலையை செய்கிறோம். எங்களுக்கு கிடைக்கும் சந்தோஷமே மிகப்பெரிய பலன்” என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

மூன்று மாத கடின உழைப்பு:

ஆட்டு தோலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பானைகள் மூன்று மாத காலம் எடுத்தே தயாராகின்றன. முதலில் தோலில் உள்ள முடி நீக்க சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் பல கட்டங்களில் அலசப்பட்டு, ஆவரம் மற்றும் கருவப்பட்டை போன்ற இயற்கை பொருட்களில் ஊறவைத்து மென்மையாக்கப்படுகிறது. இந்த செயல்முறைகள் அனைத்தும் பாரம்பரிய முறையில் கையால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பணியில் ஈடுபடும் போது கைகளும் கால்களும் பாதிக்கப்படும் அளவுக்கு கடின உழைப்பு தேவைப்படுவதாகவும், பலர் விரதம் இருந்து இந்த வேலையை செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

விலை:

இந்த ஆட்டு தோல் பானைகள் ₹300 முதல் ₹1000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய அளவிலான பானைகள் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டவை. இந்த பானைகளில் நிரப்பப்படும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதும், ஒழுகாத தன்மை கொண்டது என்பதும் இதன் சிறப்பாக கூறப்படுகிறது.

பக்தர்களின் நம்பிக்கை:

இந்த பானைகளை வாங்கி பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதாக நம்பிக்கை உள்ளது. குழந்தை பெற வேண்டும், நோய் நீங்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் போன்ற பல வேண்டுதல்களுடன் மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.

தொழிலின் தனிச்சிறப்பு:

இந்த தொழில் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. “இது எங்கள் பாரம்பரிய உரிமை; வேறு ஊரினர் இதை செய்யவில்லை” என அவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

மாற்றங்களுக்கு இடையிலும் பாரம்பரியம் தொடர்கிறது: 

இன்றைய காலத்தில் மெஷின்கள் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் இருந்தாலும், கையால் தயாரிக்கப்படும் பாரம்பரிய தோலின் தரம் மற்றும் நீடித்த தன்மை வேறுபட்டதாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார சவால்கள் இருந்தாலும், பக்தி மற்றும் பாரம்பரியத்தை காக்கும் நோக்கில் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வரும் காரியாபட்டி மக்கள், தங்கள் கைவினைப் பண்பாட்டை தலைமுறைகளுக்கு பாதுகாத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share