×
 
☰

மதுரைக்கு CM விஜய் விசிட்..! சாக்கடைக்கு தகர ஷீட்..! வைரலாகும் சம்பவம்..!!

முதல்வர் விஜய் வருகையை ஒட்டி சாக்கடைக்கு தகர ஷீட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே நடைபெறும் முன்னேற்பாட்டுப் பணிகள் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் மதுரை வருவதை முன்னிட்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பெரிய சாக்கடையை தகர சீட்டுகளால் மறைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளார்.

இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தொடக்க விழா நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

விழாவில் செப்டம்பர் 27 மற்றும் அதற்கு முன் பிறந்த சில குழந்தைகளுக்கு முதலமைச்சர் நேரடியாக தங்க மோதிரங்களை வழங்கவுள்ளார்.மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னேற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பயணிக்கும் சாலைகளில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

சில இடங்களில் புதிய சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளன. அதேபோல் மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, அலங்காரப் பணிகளும் தொடங்கியுள்ளன.இந்தச் சூழலில்தான் மருத்துவமனைக்கு எதிரே நீண்ட காலமாக இருந்து வரும் பெரிய சாக்கடையை மறைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

 

 

இதையும் படிங்க: தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share