“ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் கோடை வெயில் தற்பொழுது அதிகரித்து வரும் நிலையில் இதனை பொதுமக்கள் எதிர்கொள்ளும் விதமாக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றி கோடை வெயில் மற்றும் அனல் காற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசை பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவற்றினால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... இந்த வருஷம் கோடை காலம் கொடூரமா இருக்குமாம்... புவி அறிவியல் அமைச்சக செயலாளர் எச்சரிக்கை...!
பொதுமக்கள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள
செய்ய வேண்டியவை :
- உடலின் நீர் சத்து குறையாமல் பராமரிக்க அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும்.
- சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும்.
- சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது, பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும் .
- அதிக அளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ், மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
- பருவ கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவு உண்ணுங்கள். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள்.
- நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும்.
- மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்
- திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.
- வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம் சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைத்துக் கொள்ளலாம்.
செய்யக்கூடாதவை:
- தேவை இல்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3:30 மணி வரை வெளியே செல்லாதீர்கள் .
- வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்தவும்.
- செயற்கை குளிர்பானங்கள் மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.
கோடை வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்.:
- அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ORS பாக்கெட் கரைசல் பெற்று, 1 லிட்டர் காய்ச்சி ஆற வைத்த குடிநீரில் 1 பாக்கெட் வீதம் கலந்து குடிக்க வேண்டும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்
இதையும் படிங்க: எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!