×
 

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஒரு லட்சம் அபராதம்.. மதுரை மாநகராட்சியில் அதிரடி உத்தரவு!

மதுரையில் இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஒரு லட்சம் அபராதம் உதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது

மதுரையில் கடந்த சில வருடங்களாக பொது இடங்களில் குப்பை கொட்டும் பழக்கம் அதிகரித்து வந்தன. இதனால் நோய் தொற்று அபாயம் அதிக அளவில் இருந்து வந்தது. குறிப்பாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில்  தார் சாலைகள் அனைத்தும் குப்பை கிடங்குகளாக மாறத் துவங்கியது. பூ மார்க்கெட், பிரதான பேருந்து நிலையம், தொழில் நுட்ப நிறுவனங்கள், அதை நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என எண்ணற்ற முக்கிய கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் குப்பை மிகுந்து காணப்பட்டது.

இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் துர்நாற்றம் வீசுவதாகவும் நோய் தொற்று அபாயம் உள்ளதாகவும் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி இடம் கோரிக்கை கொடுத்து இருந்தனர்.

இதையும் படிங்க: கோவை கொண்டு செல்லப்பட்ட மூளை.. இறப்பிலும் உயிர்வாழ வைத்த மனித நேயம்..

இந்த கோரிக்கையை ஏற்றம் மாநகராட்சி, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகநேரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளை, உத்தங்குடி, பாண்டி கோயில் ஆகிய பகுதிகளில் உலக காலியிடங்கள் சாலையோரங்களில் நீர் நிலைகள் திறந்தவெளி கால்வாய்களில் குப்பை கொட்டினால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இடங்களில் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரைவாசிகளே..! நாய், பூனை வளர்க்க இனி காசு கட்டணும்..! மாநகராட்சி அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share