ஆதார் விவரங்களை கேட்கவில்லை.. குற்றச்சாட்டை நிராகரித்த திமுக..! நீதிமன்றத்தில் வாதம்..!
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஆதார் விவரங்களை கேட்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. இத்திட்டம் மக்களை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி OTP பெறும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஓடிபி பெறும் செயல்முறை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓடிபி பெறும் முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி பெறுவது, தனிநபர் தரவுகளின் தனியுரிமையை மீறுவதாகவும், இது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மக்களிடம் இருந்து OTP பெறுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திமுக தரப்பில் வாதிட்டபோது, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஆதார் விபரங்களை கேட்கவில்லை என்றும் தவறான தகவல் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. தவறான தகவல் அளித்து வழக்கு தொடரப்பட்டதால் அதனை எதிர்த்து தாக்கல் செய்யும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்ப்பதாகவும் என்றும் விளக்கமளித்தது.
இதையும் படிங்க: இறங்கி வந்த இபிஎஸ்.. கூட்டணிக்கு வாங்க..! சீமான், விஜய்க்கு அழைப்பு..!
Otp பெறுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்த நிலையில் திமுக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தவறான தகவல் அளித்து வழக்கு தொடரப்பட்டதாக வழக்கறிஞர் வில்சன், திமுக ஐடி வின் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் உள்ளிட்டோர் வாதிட்டனர். இதனை அடுத்து மனு தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாரு.. பிரதமரின் உரை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்..!