அடச்சீ... பெண்களை படம் பிடித்து ரசித்த மின்வாரிய அலுவலர்... கையும் களவுமாக மாட்டிய சம்பவம்...!
பெண் ஊழியர்களை படம் பிடித்து வைத்திருந்த மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் எங்கும் கிடைக்கும் காலத்தில், தனிப்பட்ட தனியுரிமை என்பது ஒரு அரிய பொக்கிஷமாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்கள், அவர்களின் அன்றாட வாழ்வில் அறியாமலேயே படம் பிடிக்கப்படுவதன் போது, அது வெறும் தொழில்நுட்ப சம்பவமாக மட்டுமல்ல, ஆழமான உளவியல் மற்றும் சமூக சேதத்தை ஏற்படுத்தும் ஒரு குற்றமாக உருவெடுக்கிறது.
அதிலும் பணி புரியும் இடங்களில் நிகழும் சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது. அப்படிதான் மதுரையில் பெண் ஊழியர்களை மின்வாரிய அலுவலக அலுவலர் ஒருவர் படம் பிடித்து வைத்திருந்த உள்ளார். பெண் ஒருவரிடம் கையும் களவுமாக மாட்டிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். கழிவறைக்கு சென்ற பெண்ணை படம் பிடித்தபோது அலுவலர் வசமாக மாட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
மதுரை சமயநல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் அருள்தாஸ் புரத்தை சேர்ந்த ராஜராஜேஸ்வரன். இவர், கழிவறைக்கு செல்லும் பெண்களை படம்பிடித்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். பெண் ஊழியர் ஒருவர் கழிவறை சென்ற போது ஜன்னல் வழியாக செல்போனில் படம்பிடித்ததாக புகார் அளிக்கப்பட்டது. பிறகு அவரின் செல்போனை வாங்கி பார்த்த போது பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுவர்களை வளைத்து வளைத்து கடித்த தெருநாய்கள்... மக்கள் அச்சம்...!
தொடர்ந்து மின் கோட்ட செயற்பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் ராஜராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். பெண் ஊழியர்களை படம் பிடித்து வைத்திருந்த அலுவலரின் செயல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை மேயர், கவுன்சிலர்களை தவிர்த்த பிடிஆர்.. மக்களை சந்திக்க இவர்களுடன் தான் சென்றாராம்.. பின்னணி என்ன..??