×
 

கோயில் கும்பாபிஷேகத்தில் ஒலிபெருக்கிகள்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மே 30ஆம் தேதி வரை கோவில் அருகில் அதிக எண்ணிக்கையிலும், அதிக ஒலி அளவிலும் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் ஒலி பெருக்கி  வைத்துள்ளனர்.

குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் வைப்பது நடைமுறைதான் அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து. அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலிபெருக்கிகள் ஒலி அளவு இருக்க வேண்டும்.அதிக ஒலி அளவில் வைக்க கூடாது. இதனை காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருச்சி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், செவலூர் கிராமத்தில்  300 குடியிருப்புகளில் மக்கள் குடும்பத்துடன்  வசித்து வருகிறார்கள். செவலூர் கிராம அப்பு அய்யர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மே 30ஆம் தேதி வரை கோவில் அருகில் அதிக எண்ணிக்கையிலும், அதிக ஒலி அளவிலும் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் ஒலி பெருக்கி  வைத்துள்ளனர்.

இதனால்  அங்கு வசிப்பவர்கள் தொந்தரவு ஏற்படுகிறது எனவே ஊர் முழுதும் மைக் செட் கட்டி    தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார். இந்த வழக்கு,நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 13 பேர் 15 நாளில் 'சஸ்பெண்ட்'!! விஜய் பக்கா ஸ்கெட்ச்! களை எடுக்கும் பணியில் தவெக தீவிரம்

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது ஒலிபெருக்கிகள் வைப்பது நடைமுறைதான். அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலிபெருக்கிகள் ஒலி அளவு இருக்க வேண்டும்.அதிக ஒலி அளவில் வைக்க கூடாது.மக்கள்  பாதிக்கப்படுவர் .

எனவே அனுமதிக்கப்பட்ட அளவில் தொந்தரவு இல்லாத வகையில் ,ஒலி  பெருக்கிகள் ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் மணப்பாறை டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு சென்று குடமுழுக்கு விழாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, ஸ்பீக்கர்கள்,  அனுமதிக்கப்பட்ட அளவில்  ஒலி அளவில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

இதையும் படிங்க: திமுக மாவட்ட செயலாளர்கள் அட்ராசிட்டி ஓயவில்லை!! தோல்விக்கான காரணத்தை அடுக்கும் கட்சி நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share