×
 

அரசாணை வெளியிட்டும் இப்படியா?... கண்கள் சிவந்த நீதிபதிகள்... பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

பள்ளி கட்டணம் குறித்து அரசு அரசாணை வெளியீட்டும், எவ்வாறு கூடுதல்  கட்டணம் வசூலிக்கப்படுகிறது- நீதிபதிகள் கேள்வி.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய வழக்கு. தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குனர் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " தமிழக அரசு 2008 பிறப்பித்த அரசாணை, 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்துள்ளது".  இருப்பினும் பல பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து அனுமதியற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்நிலை தொடர்கிறது.இதேபோல்  ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஆத்திப்பட்டு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து அரசாணைக்கு முரணாக கட்டணம் வசூல் செய்யபடுகிறது.

இதையும் படிங்க: அரசியலில் அதிரடி திருப்பங்கள்..! தவெகவுடன் கூட்டணியா..? முதல்வர் விஜயை சந்திக்கும் வைகோ..!!

எனவே வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக  விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. பள்ளி தரப்பில், "பாதிக்கப்பட்ட பெற்றோரே நீதிமன்றத்தை அணுகலாம் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "அரசு அரசாணை வெளியீட்டும், எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது?  என கேள்வி எழுப்பி, தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குனர் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் கேம்பயர், இசை நிகழ்ச்சிகளுக்கு தடை...ஸ்பார்ட் வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share