×
 
☰

எத்தனை? எவ்வளவு? என்ன?... லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... கடைசியில் மெகா ட்விஸ்ட்...!

கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டது?, எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது?என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்வி.

 

 

பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்திருக்கலாம் என்பது குறித்த முடிவுகளை எடுக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தகவல்.

இதையும் படிங்க: 44.7 கி.மீ. நீளத்துக்கு இரும்புத் தடுப்பு.. விஜய் வருகைக்காக கோடிகள் செலவா? கிளம்பிய விமர்சனம்..!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளராகப் கடந்த 2021 ஆண்டு   பணியின்போது ரூ.45,000 வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் சோதனையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.  

இந்நிலையில் தான் மீதான  ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி கலா என்பவர் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம். 

அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என  மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அரசு ஊழியர்கள் பணியின் போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது சிறிது கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இடமிருந்து நீதிமன்றம் சில விவரங்களை பெற விரும்புகிறது அதனை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார் அதில்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையால் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் எண்ணிக்கை. ​ஆய்வுகளின் போது எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது.?, இந்த ஆய்வுகளின் மூலம் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது?, ​அவற்றின் தற்போதைய நிலை என்ன சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பின் அதன் விவரங்களை அறிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: மதுரையில் முதல்வர் விஜய்..!! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!! கடுப்பில் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share