×
 

#BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்

உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…

தன் தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கும்போது, அந்த வைபவத்தைப் பார்க்க கள்ளழகர், அழகர் மலையில் இருந்து இறங்கி மதுரையை நோக்கி வரும் போது, தன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்ததால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் அழகர் வைகையில் நீராடி புறப்பட்டுச் செல்வதாக புராண கதைகள் கூறுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துக்கு மத்தியில் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். வைகை ஆற்றிற்க்குள் அமைக்கப்பட்ட மண்டப்படிகளில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அலை அலையாய் திரண்டிருந்த பக்தர்கள், அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமடைந்தனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

இதையும் படிங்க: கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!

கடந்த 10 நாட்களாக சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடியதால் அசம்பாவிதங்களை தடுக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் ஏற்படும்.. திமுகவினர் பேச்சை கேட்கும் போலீஸாருக்கு தண்டனை.. செல்லூர் ராஜூ எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share