×
 

மோசடி புகார்... மதுரை மேயர் கணவரை சென்னையில் வைத்து தூக்கிய போலீஸ் - பின்னணி என்ன?

மதுரை மாநகராட்சி பல கோடி ருபாய் சொத்துவரி முறைகேடு வழக்கில்  மேயர் கணவர் மற்றும் உதவி ஆணையர் கைது

மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சியில் கடந்த  2022-2023-ஆம் ஆண்டுகளில் பல கோடி ருபாய்  வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.   அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்த நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.

மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடிரூபாய் அளவுக்கு சொத்து வரி முறைகேடு நடந்த விவகாரத்தில்  உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் மதுரை மண்டல டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இம்முறைகேட்டில் கைதான சொத்துவரிக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்கு மூலத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்பசன் மற்றும் கவுன்சிலர்கள் பெயரை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அம்மானா சும்மாவா? இறந்த மகனின் கையை பிடித்தபடியே உயிரை விட்ட தாய்...

இதனிடையே  முறைகேடு விவகாரத்தில்  மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை சென்னையில்  மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வருகின்றனர்

மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஏற்கனவே திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வரி முறைகேடு விவகாரத்தில் பொன்வசந்த்க்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியான நிலையில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: “பதினெட்டாம் படி கருப்பு”... பார்த்து மெய் சிலிர்த்துப் போன பக்தர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share