மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்... அக்கம், பக்கத்து கட்டிட உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு... மாநகராட்சி கறார்...!
சுற்றியுள்ள வீதிகளில் உள்ள கட்டிடங்களின் மேற்க்கூரைகளில் பொதுமக்கள் ஏறுவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது
கும்பாபிஷேக தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள கட்டிடங்களின் மேற்க்கூரைகளில் பொதுமக்கள் ஏறுவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை காண்பதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கும்பாபிஷேக தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொதுமக்கள் மேற்கூரையில் ஏறுவதற்கு அனுமதிக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: முட்டியில் காயம், மார்பில் கடி... வயிற்றில் வெளிர் நில திரவம்..! மதுரை மாணவன் உயிரிழப்பில் திடுக்கிடும் ரிப்போர்ட்..!!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுற்றி உள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு, மின்சார கம்பிகள் வழித்தடம் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றி மூன்று அடுக்குகளாக உள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட வீதிகளில் கட்டடங்களில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!