×
 

விஐபிகளுக்கு மரியாதை... பக்தர்களுக்கு அவமதிப்பு... சர்ச்சையுடன் முடிந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...!

பக்தர்கள் ஏமாற்றம்... VIP-களுக்கு முன்னுரிமை! – சர்ச்சைகளுடன் நிறைவடைந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகம்

ஆன்மீகத் தலைநகராம் மதுரையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா, தற்போது பெரும் பக்தர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது 

​17 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு ஒரே நாளில் புனித நீர் ஊற்றப்பட்டு, யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றாலும், தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான சாதாரண பக்தர்கள் கடும் ஏமாற்றத்துடனும் ஆத்திரத்துடனும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கும்பாபிஷேகத்தைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே மதுரையில் குவிந்தனர். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கை எனும் பெயரில் காவல் துறையினர் சித்திரை, ஆவணி மற்றும் நான்கு மேலமாசி வீதி  மாசி வீதிகளிலும் இரும்புத் தடுப்புகளை (Barricades) அமைத்து முற்றிலும் போக்குவரத்தையும் பொதுமக்கள் நடமாட்டத்தையும் முடக்கினர்.

இதையும் படிங்க: நாங்க மனுஷங்க இல்லையா சார்?... அமைச்சர் காரை மறித்து பக்தர்கள் ஆவேசம்... மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் பரபரப்பு...!

​சித்திரைத் திருவிழா காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும், மாசி வீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தையும் கண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

ஆனால், இந்த கும்பாபிஷேக நிகழ்வில் மாசி வீதிகளிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், கோபுர தரிசனம் கூட செய்ய முடியாமல் பக்தர்கள் அவதியுற்றனர்.

கும்பாபிஷேகத்தைக் கோவில் மேல்தளத்தில் இருந்து காண 9,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், இந்த அனுமதிச் சீட்டுகள் (Passes/Tokens) சாதாரண பக்தர்களுக்குக் கிடைக்காமல், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ-க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. "

இது பக்தர்களுக்கான திருவிழாவாக நடத்தப்படாமல், பணக்காரர்களுக்கான திருவிழாவாக மாற்றிவிட்டனர்" எனப் பொதுமக்கள் குற்றம் கூறி வருகின்றனர்

நீண்ட நேரம் சாலையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குக் குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள்  என எந்தவொரு அடிப்படை வசதியும் மாவட்ட நிர்வாகத்தால் முறையாகச் செய்யப்படவில்லை.  நெரிசலிலும் பெண்கள் முதியவர்களும் குழந்தைகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

​இருப்பினும், சாமானிய மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், VIP கலாச்சாரத்திற்கு முன்னுரிமை அளித்து தங்களை அலட்சியப்படுத்தியதாகக் கூறி மதுரை மக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்புகளை பக்தர்கள் தெரிவித்தனர்

இதையும் படிங்க: #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share