மதுரையே மணக்க, மணக்க... வடை, பாயாசத்துடன் 1.5 லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து...!
நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் விருந்து 1.5 லட்சம் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தீவிரம் - காய்கறிகள் குவியல் குவியலாக நறுக்கும் பணிகளில் ஈடுபடும் பக்தர்கள்
மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாளை விழாவின்10 ஆம் நாள் நிகழ்வாக மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை நேரில் கண்டு தரிசனம் செய்யவுள்ளனர். அதற்கான ஏற்பாடு பணிகளை கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!
அந்தவகையில் இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாப்பிள்ளை அழைப்பிற்காகவும், திருக்கல்யாண நடைபெறும் நாளை காலை முதல் மாலை வரை சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை மாப்பிள்ளை விருந்துக்காக பொங்கல், கேசரி, வடை தயாரிப்பிற்காகவும்,
திருக்கல்யாண விருந்தாக நாளை காலை பொங்கல், இட்லி, கிச்சடி வடையும், நாளை மதியம் தயிர், தக்காளி, சாம்பார், வெஜ்டேபிள் பிரியாணி உள்ளிட்ட 6 வகையான சாதங்களும் பிரம்மாண்டமான முறையில் விருந்து அளிப்பதற்கான உணவு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது.
7 ஆயிரம் கிலோ அரிசி மூலம் 1.5 லட்சம் பக்தர்களுக்கு மேல் உணவு தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சமையல் பணியில் ஏராளமான சமையல் கலைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று சமைத்துவருகின்றனர்
இந்த நிலையில் சுத்தமாகவும் தூய்மையாகவும் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்
தொடர்ந்து சமையல் கலைஞர்களுக்கு பாதுகாப்பு சுகாதாரமான முறையில் தயார் செய்யவும் பொது மக்களுக்கு பரிமாறவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் நறுக்கும் பணிகள் மற்றும் சமையல் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெண்கள் ஆர்வமுடன் வருகை தந்து காலை முதல் காய்கறிகள் நறுக்கும் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம்: 2026-27 கல்வியாண்டில் 1 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை!