சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!
சோழவந்தான் பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சியாம் சுந்தர் ராஜன் (வயது 36). இவர் சோழவந்தான் காவல் நிலையம் எதிரில் உள்ள மட்டை கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முத்துமீனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வாடிப்பட்டி சோழவந்தான் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அரசு டாஸ்மாக் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சுந்தரை முகம் மற்றும் உடல் பகுதிகளில் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது
இதன் தகவல் அறிந்து விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், சுந்தரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!
இந்த கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதமா? அல்லது மதுபோதையில் ஏற்பட்ட தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சோழவந்தான் பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிகாலை வேளையிலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சோழவந்தான் அருகே தென்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முன் விரோதம் காரணமாக பட்டப் பகலில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செக்கானூரணி அருகே தேங்கள்பட்டி பகுதியில் இளைஞர் டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சோழவந்தான் பகுதியிலும் டிரைவர் சுந்தர் படுகொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கையாக உள்ளது
இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த டிரைவரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..!! அட.. இந்த பெயரில் தான் அர்ச்சனை செய்தாராம்..!!