×
 
☰

#BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். இவர் 65,321 வாக்குகள் பெற்று தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

இது இவருக்கு மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியாகும்.செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் தனித் தொகுதியில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதனால் தொகுதி காலியானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது ஆரம்பத்திலிருந்தே மரகதம் குமரவேல் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அவர் திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றியை உறுதி செய்தார்.மரகதம் குமரவேல் இந்தத் தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றவர்.

இதையும் படிங்க: மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

முதலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் மீண்டும் அதே கட்சியில் வெற்றி பெற்றார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றி இந்தத் தொகுதியில் அவருக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

இதையும் படிங்க: பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share