×
 
☰

மஹாளய அமாவாசை..! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, கடற்கரையில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆடி, தை மற்றும் புரட்டாசி அம்மாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து  வழிபட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை விட இன்று புரட்டாசி மாதம் வரக்கூடிய மஹாலய அமாவாசையில் நம் முன்னோர்கள் மட்டுமல்லாது, நமது நண்பர்கள், குருமார்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் ஆகியோருக்கும் இந்த காலகட்டங்களில் திதி கொடுத்து பிதுர் பூஜை செய்து  வழிபட உகந்த காலமாக கருதப்படுகிறது.

இன்று  மஹாளய அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பல்லாயிரகணக்கான  பக்தர்கள் இராமேஸ்வரம் வருகை தந்து , இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி,தர்ப்பணம் செய்து முன்னோர்களை பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூரில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த மக்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அனைவரும் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து எள், தர்ப்பபுள், வைத்து பிண்டம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். மேலும் காய்கறிகள், மளிகை பொருட்கள் வைத்தும் வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாஹாளய அமாசையையொட்டி குமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இந்துகள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள் பிண்டம் வைத்து தர்பணம் கொடுத்தார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: முன்னோர்களை நினைவுகூரும் மகாளய அமாவாசை..!! தர்ப்பணம் செய்யும் நேரம் இதோ!

 திருவண்ணாமலை ஐயங்குளக்கரையில் மஹாளய அமாவாசையையொட்டி நூற்றுக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதேபோல், தூத்துக்குடி புரட்டாசி மாத மாகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில்உள்ள துறைமுக கடற்கரைப் பகுதியில்  ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் காவிரி ஆற்றுப் படித்துறைகளில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து  வழிபாடு செய்தனர். தொடர்ந்து கால்நடைகளுக்கு கீரைகள் வழங்கி வழிபட்டனர். 

இதையும் படிங்க: குட் நியூஸ்..! ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளுக்கு கிரீன் சிக்னல்.. இடைக்கால தடையை நீக்கி ஹை கோர்ட் உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share