பெரும் பதற்றம்… ம.க ஸ்டாலின் மீதான கொலை முயற்சி! டயர்களை கொளுத்தி போராடும் பாமகவினர்
பாமக பிரமுகர் ம.க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
பாமக பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம. க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருடன் சென்ற இரண்டு பேரை அறிவாளால் வெட்டி நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பாமகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ம. க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினராக, தஞ்சாவூர் பகுதியில் கட்சியின் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
பாமக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வன்னியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ராமதாஸால் 1989இல் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, ம. க. ஸ்டாலின் உள்ளூர் மட்டத்தில் கட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், குறிப்பாக வன்னியர் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக, கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை ஒருங்கிணைப்பதோடு, உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து, பாமகவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு உழைத்து வருகிறார்.ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக ம. க. ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்பில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறார்.
இதனிடையே, பேரூராட்சி அலுவலகம் சென்ற வழியில் ம. க. ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவருடன் சென்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்பட்டுள்ள நிகழ்வு பாமகவினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பாமகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல் கொண்டு வீசி கொலை முயற்சி நடந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் டயர்களை கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: பாமக பிரமுகர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி.. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பல்..!
ம.க ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என போலீசார் விசாரித்து வரும் நிலையில் போராட்டம் நடக்கும் இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அடங்காத புகைச்சல்… அசராத அன்புமணி! விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பேச்சு