×
 

அதிக திமிரை அடக்கணும்.. மதுரை வடக்கு தொகுதியில் போட்டி..! மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தல்..!

அதிகார திமிர் இருந்தால் தோழமைக் கட்சிகள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஆரம்பகாலத்தில் இருந்தே செயல்பட்டு வந்த மாணிக்கம் தாகூர், கட்சியின் இளைஞர் அணி மற்றும் அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வலுவான முகங்களில் ஒருவராக உருவெடுத்த அவர், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 17-ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2024-ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று 18-ஆவது மக்களவையில் தொடர்கிறார். 2020-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. தெலங்கானா விவகாரங்களுக்கான பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு வழங்கப்பட்ட முக்கியமான தேசிய அங்கீகாரமாகக் கருதப்பட்டது. இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.விருதுநகர் தொகுதியில் அவர் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்பி வருகிறார். குறிப்பாக தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உரிமைகள், மத்திய அரசின் திட்டங்களின் குறைபாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார். 

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கிடையாது! காங்கிரஸை கைவிட்டது திமுக! விஜய் பக்கம் தாவ திட்டம்!

இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவிடம் கோரிக்கை வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share