மீண்டும் அமைச்சரவையில் இடம்..! முதல்வருக்கு மனதார நன்றி கூறிய மனோ தங்கராஜ்..!
மீண்டும் தனக்கு அமைச்சரவையில் இடம் வழங்கிய முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் மனோ தங்கராஜ் மனப்பூர்வமான நன்றிகளை கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களில் உள்ள நிலையில் அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வைத்து வந்த மின்சார துறை அமைச்சர் சிவசங்கருக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனு தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பால்வளத்துறை வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில் இன்று மாலை அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: கசப்பான மனநிலையில் திமுக கூட்டணி கட்சிகள்.. அதிமுக அணியில் விசிக.? கொளுத்தி போடும் ஜெயக்குமார்!
இந்த நிலையில் தனக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் வழங்கிய முதலமைச்சருக்கு மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் சேவையாற்ற தமிழக அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!