×
 

செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் அனுமதி இல்லை. மாசாணி அம்மன்கோவில் வளாகத்திற்குள் பண பரிவர்த்தனை ஸ்கேனர். நடைமுறை சிக்கல்களில் தவிக்கும் பக்தர்கள்

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் அனுமதி இல்லை. மாசாணி அம்மன்கோவில் வளாகத்திற்குள் பண பரிவர்த்தனை ஸ்கேனர். நடைமுறை சிக்கல்களில் தவிக்கும் பக்தர்கள்


பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் இன்று முதல் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு செல்போனுக்கு ஐந்து ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முகப்புகளில் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் செல்போன்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக இரண்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு சுமார் 240 லாக்கர்களின் செல்போன்கள் பராமரிக்கப்படுகிறது. அரசால் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய்க்கு உணவு ஒரு வேலை உணவு வழங்கப்படும் நிலையில், ஒரு செல்போன் பாதுகாப்பதற்காக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுவது அதிகம் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

மேலும் மாசாணி அம்மன் கோவில் வளாகத்திற்குள் இயங்கும் தனியார் கடைகளில் ஸ்கேனர்கள் இருப்பதால் இருப்பதால் பண பரிவர்த்தனைகளுக்கு பக்தர்கள் செல்போனின்றி தவித்து வருகின்றனர். மேலும் அவசர உதவிக்காக கோவில் வளாகத்திற்குள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கோவிலுக்குள் இருப்பதால் நடைமுறை சிக்கல்களை களைய அதிகாரிகள் முன் வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share