×
 

கோட் சூட்டில்.. அரங்கத்திற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்..!! ஒலிக்கப்போகும் அந்த வார்த்தை..!!

நேரு உள்விளையாட்டு அரங்கிற்குள் கோட் சூட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்தார் தவெக தலைவர் விஜய்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை உருவாகியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் உரிமையை நிலைநாட்டியுள்ளது. நேற்று மாலை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.மு.லீ.) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநர் உரிமை கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, ஆளுநர் இன்று காலை 10 மணிக்கு விஜய்க்கு பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று காலை தமிழகத்தின் 25ஆவது முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க உள்ளார். இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்காக விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் அரங்கத்திற்கு வந்த நிலையில், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் அங்கு திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கருப்பு கோட் சூட்டில் அரங்கிற்குள் நுழைந்தார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் TVK TVK என உற்சாகமாக கோஷமிட்டனர். முன்னதாக, விழாவிற்கு வந்த வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வந்திருந்த தவெக தலைவர் விஜய் கோட் சூட் அணிந்து மேடைக்கு வந்தபோது விழாவிற்கு வந்தவர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். 

பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விழாவில் பங்கேற்றார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விழா அரங்கத்துக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஆகியோரும் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. விஜய் வசந்த் விழாவில் பங்கேற்றார்.

தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, கூட்டணி ஆதரவுடன் 150க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. பதவியேற்புக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சி வழங்குவார் என தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். பதவியேற்பு விழா நிகழ்வுகள் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share