×
 

இயக்கம் துவங்கிய முதல் நாளிலேயே 10 லட்சம் பேர் ஆதரவு!! 13 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை! அண்ணாமலை பாய்ச்சல்!

பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை, 'இது நம்ம இயக்கம்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் புதிய அலை எழுந்துள்ளது. 'மாறுவோம், மாற்றுவோம்' என்ற முழக்கத்துடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை தொடங்கியுள்ள 'We The Leaders' இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த இயக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து இணைந்துள்ளனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி, மொத்தம் 12 லட்சம் பேர் தங்களை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த இயக்கம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்வந்தனர். இரவு 7 மணிக்குள் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது. இன்று காலை 5 மணிக்கு 11 லட்சத்தைத் தாண்டிய நிலையில், வெகு வேகமாக உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

பாஜகவில் இருந்து வெளியேறிய பின்னர் அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளார். "இது நம்ம இயக்கம்" என்ற பெயரில் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14-ம் தேதி இந்த இயக்கத்தை முழு அரசியல் கட்சியாக அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். 

மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், அரசின் செயல்பாடுகள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்களின் குரலாக இயக்கம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்புக்கு பின்னர், தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவு அலைகள் எழுந்துள்ளன. பலரும் தங்களை இயக்கத்துடன் இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இயக்கத்தில் சேர விரும்புவோர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இணைப்பு மூலம் எளிதாக பதிவு செய்யலாம். அண்ணாமலையின் துணிச்சலான அணுகுமுறைக்கு மக்கள் பெரும் வரவேற்பு தருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 

இந்த இயக்கம் தமிழக அரசியலை எப்படி பாதிக்கும், எந்தெந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். தற்போதைக்கு, ஒரு நாளில் 12 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த சாதனை அண்ணாமலைக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இயக்கம் செயல்படும் என அண்ணாமலை தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share