தவெக நிர்வாகி மதியழகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்... அனுமதி அளித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு...!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மதிகழகனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசரிசிக்கு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தில் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக விட்டுக் கழகத்தின் நிர்வாகி மதியழகனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்
இதையும் படிங்க: அதிமுகவுக்கு ரூட்டை கிளியர் செய்து விட்ட உதயநிதி... செம்ம குஷியில் எடப்பாடி பழனிசாமி...!
தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்த விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு புலனாய்வு குழு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கு அனுமதி கொடுத்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!