×
 

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் உடும்பு அடித்துக் கொலை... MCC ஊழியரை அதிரடியாக கைது செய்த வனத்துறை அதிகாரிகள்...!

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் உடும்பு அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஊழியரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (MCC), சென்னையின் பழமைவாய்ந்த நிறுவனமாகும். 1846ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி ஐந்து உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட இந்தக் கிளப், ஆரம்பத்தில் ஒரு சிறிய கிரிக்கெட் அணியாக இருந்தாலும், பின்னர் இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் மதிப்புமிக்க கிரிக்கெட் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

இது வெறும் விளையாட்டு அரங்கம் மட்டுமல்ல. இது கிரிக்கெட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் சின்னமாகும். மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், இந்தியாவின் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருக்கிறது, மேலும் இன்றும் அதன் செழுமை மற்றும் செல்வாக்கைத் தக்கவைத்திருக்கிறது.

இந்த மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் உடும்பு அடித்து கொன்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் மூன்று அடி நீளம் கொண்ட அரியவகை உடும்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்த ஒருவர் கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிக்க தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த உடும்பை மீட்டனர். அரிய வகை உடும்பு நகர் பகுதிகளுக்குள் வர வாய்ப்பு இல்லை என்றும் சட்டவிரோதமாக யாராவது வளர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கார்த்திகா நம் தேசத்தின் பெருமை... தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ஜி.வி பிரகாஷ் வாழ்த்து...!

உடும்பை உணவுக்காக யாராவது பிடித்துக் கொண்டு வந்தார்களா அல்லது மைதான பகுதிக்கு வந்ததை அடித்து கொன்றார்களா என்று தெரியவில்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் உடும்பை அடித்துக் கொன்றதாக MCC ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளனர். பாலச்சந்தர் என்பவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெருங்கும் மோன்தா CYCLONE... தப்புமா சென்னை?.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share