“எங்கடா எழுந்து போறீங்க...” கோவத்தின் உச்சிக்கே சென்ற வைகோ... தொண்டர்கள் செய்த பகீர் காரியம்...!
சாத்தூரில் மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசும்போது வெளியேறிய தொண்டர்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று நெல்லை மண்டல மதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார். அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
அப்போது தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தி சேகரித்த செய்தியாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியேற்ற உத்தரவிட்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த வைகோ செய்தியாளர்களை நோக்கி, “காலி சேரையா எடுத்துக்கிட்டு இருக்க. எப்பா உனக்கு அறிவு இருக்கா? காலி சேரைய எடுத்துட்டு இருக்க, வெளிய 1000 பேர் இருக்காங்களே அத போய் போட்டு விடுவியா? கேமராவ கேமராவ பிடிச்சு பிலிமை புடுங்கு” என சொன்னது தான் தாமதம்.
இதைக் கேட்ட மதிமுக தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.இதில் ஜனனம், தந்தி டிவி உள்ளிட்ட பல செய்தியாளர்களை சரமாரியாக தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் ஜனனம் செய்தியாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளா? பேசவே இல்லை... வைகோ பரபரப்பு தகவல்!!
மதிமுக தொண்டர்களிடமிருந்து காவல்துறையினர் செய்தியாளர்களை பத்திரமாக வெளியே மீட்டனர்.
இதையும் படிங்க: மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!