இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!
எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தலைமைக்கு மீறி செயல்படுகின்றனர்,இதற்கு யார் காரணம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
லஞ்ச லாவனியங்கள் இல்லாத அரசை விஜய் நடத்தினால் 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார், 60 சதவீத வாக்குகளையும் பெறுவார், இடைத்தேர்தல் ஐந்து தொகுதிகள் அல்ல,
234 தொகுதிகளிலும் இனி தேர்தல் வந்தால் வெளிப்படையான லஞ்ச லாவண்யம் அற்ற அரசாங்கத்தை தவெக நடத்தினால் 234 தொகுதிகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். எந்தவித கூட்டணியும் இல்லாமல் சகோதரர் விஜய் வெற்றி பெறுவார் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அடுத்த கருவேப்பிலையான் கேட் அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம் பி துரை வைகோ கூறுகையில்:
கட்சி வேலை இருந்ததால் நான் கட்சி பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை, 5 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த போது, குதிரை பேரம் சொன்னார்கள், ஆனால் இன்று எம்எல்ஏக்களை இன்று நாங்கள் கண்டெய்னர் மாடல் கட்சியினரிடம் இழந்துள்ளோம்,
இதையும் படிங்க: மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!
எங்களை வற்புறுத்தி திமுக சின்னத்தில் நிற்க வைத்து இன்று அவர்களை திமுகவில் சேர்க்கக்கூடிய நிலைக்குப் போய்விட்டனர். இது குதிரை பேரமா கழுதை பேரமா..?. கட்சியின் பொதுச்செயலாளர் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று கூறிவிட்டார். இது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு.
அப்படி இருக்கும்போது திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எங்கள் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொல்கிறோம். பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்குவது யார்..?தவெக செய்ய வேண்டிய அவசியம் அல்ல. காசு செலவு செய்யாமல் தமிழக வெற்றிக் கழகம் இந்த அளவு வெற்றி பெற்றுள்ளனர்.
எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தலைமைக்கு மீறி செயல்படுகின்றனர்,இதற்கு யார் காரணம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். குதிரை பேரம் ஒட்டக பேரம் குறித்து கேட்க வேண்டிய இடத்தில் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும்.
விசிக, கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சியினர் என்ன காரணத்துக்காக தவெக வை ஆதரிக்கிறோம் என்று தெளிவாக சொல்லி விட்டார்கள். ஜனாதிபதி ஆட்சி தவிர்க்கவே அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
30 ஆண்டுகளாக தமிழ்நாடு இப்படி குட்டிச்சுவரா..? போனதற்கு யார் காரணம்..?. தமிழ்நாட்டில் இழிநிலைக்கு காரணம் என்று எல்லாருக்கும் தெரியும். மூப்பனார், வைகோ எல்லாம் மாற்று அரசியலுக்கு முயற்சி செய்தார்கள், ஆனால் அது இன்று தவெக மூலம் கைகூடி வந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு இன்று சீரழியவில்லை, போதை பொருள் தமிழ்நாடு சார்ந்த பிரச்சினை அல்ல.தமிழ்நாட்டை விட வட மாநிலத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. இந்த அரசு அமைக்கப்பட்டு 40 நாட்கள்தான் ஆகிறது, உடனே எப்படி தீர்வு காண முடியும்
பல்வேறு துறைகளில் அவல நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். இன்று மக்கள் சந்தோஷமாக உள்ளனர்,பார்ட்டி ஃபண்ட் உள்ளிட்ட எதுவும் தற்போதையில்லை. லஞ்ச லாவனியங்கள் இல்லாத அரசை விஜய் நடத்தினால் 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார், 60 சதவீத வாக்குகளையும் பெறுவார்.
மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்,மக்களிடம் இந்த ஆட்சி மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இது தொடர வேண்டும். திருச்சி தொகுதியில் எனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் திமுகவினர்,அவர்களின் முயற்சிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதை நான் மறக்க மாட்டேன். அதே நேரத்தில் எனது வெற்றிக்கு முழுக்க முழுக்க திமுக தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. கூட்டணி கட்சியினர் மற்றும் வைகோவின் மகன் என்பது படித்த வேட்பாளர் என்பதும் காரணம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு திமுக தோழர்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் தான் உள்ளனர். திமுக நல்ல எதிர்க்கட்சியாக செயல்படாமல் இருக்கின்ற இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்தது வருகின்றனர்.
மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் தேர்தலுக்கு தயாராக இருங்கள் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். இதை ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சின் செயல்பாடாக பார்க்க முடியாது.
இந்த அரசை கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள மக்கள் ரசிக்கின்றனர். லஞ்சம் இல்லாத, பார்டி பண்ட் இல்லாத இந்த அரசை மக்கள் வரவேற்கின்றனர். திமுகவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இந்த மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இடைத்தேர்தல் ஐந்து தொகுதிகள் அல்ல, 234 தொகுதிகளிலும் இனி தேர்தல் வந்தால் வெளிப்படையான லஞ்ச லாவண்யம் அற்ற அரசாங்கத்தை தவெக நடத்தினால் 234 தொகுதிகளிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் தேர்தலில் ஜெயித்துள்ளனர். ஆனால் 6 ஆயிரம் கோடி செலவு செய்தும் திமுக தோல்வி அடைந்துவிட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
எந்தவித கூட்டணியும் இல்லாமல் சகோதரர் விஜய் வெற்றி பெறுவார். இந்த சாக்கடை அரசியலில் மாற்றுவதற்கான மாற்றம் வந்துள்ளதே என்று நான் உட்பட எல்லோரும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.அரசியல் ஏன் கெட்டுப் போய் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும்,
மக்கள் ஏன் இவ்வளவு நாட்கள் பணம் வாங்கினார்கள், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதால்தான். அதனால் பணம் வாங்க வேண்டிய கட்டாய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர் ஆனால் இன்றைக்கு ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விஜயை வெற்றி பெற வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த துரை வைகோ...!