×
 

“உட்கார்றியா... இல்லையா...” - மேடையிலேயே டென்ஷன் ஆன வைகோ... மதிமுக கூட்டத்தில் பரபரப்பு....!

உட்கார்றியா இல்லையா? குடிச்சிருப்பான். இல்லாட்டி இந்த சத்தம் போட மாட்டான். ஊசி விழுந்தால் ஓசை கேட்கிற அளவுக்கு நிசப்தம் நிலவுகிற போது ஒருவன் கூச்சடுகிறான் என்றால் அதற்கு மது போதையின் காரண என தொண்டனை சாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேச முயன்ற போது கூட்டத்திற்குள் இருந்த தொண்டர் குடிபோதையில் தொந்தரவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த வைகோ அந்த நபரை நோக்கி, “உட்காருறயா இல்லையா?,  உட்கார்றியா இல்லையா?. குடிச்சிருப்பான். இல்லாட்டி இந்த சத்தம் போடமாட்டான். எல்லாம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது மாதிரி அமைதியா இருக்கிற போது ஊசி விழுந்தால் ஓசை கேட்கிற அளவுக்கு நிசப்தம் நிலவுகிற போது ஒருவன் கூச்சடுகிறான் என்றால், அதற்கு காரணம் மது போதையின் காரணமாக தான் இருக்கும்” என சகட்டுமேனிக்கு சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், இதை நான் நன்கு அறிந்ததால்தான் மது கடைகளை மூடுவதற்கு நாடு முழுவதும் சுற்றி வந்தேன். இதற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டங்களால் தான், என் அன்னை மாரியம்மாள் இன்னும் ஐந்து வருடம் உயிர் வாழ வேண்டிய அவர் மரித்து போனாள். நான் இதை ஞாபகப்படுத்துவதற்கு காரணம் இளைய தலைமுறை சீரழிந்து கொண்டிருக்கிறது. மதுவின் பிடியிலே போதை பொருட்களின் பிடியிலே பாலாகி கொண்டிருக்கிறது. பாலகர்களின் வாழ்க்கை இளைஞர்களின் வாழ்க்கை.  இதை சொல்லிவிட்டு மீண்டும் விட்ட இடத்துக்கே தொட வருகிறேன். அதுதான் ஒரு பேச்சாளர் செய்ய வேண்டிய வேலை எங்கே சென்றாலும் மீண்டும் நீ எந்த இடத்திலே விட்டாயோ அதை மல்லிகை பூச்சரத்தை தொடுப்பதை போல அங்கே கொண்டு வந்து பேச்சை கோர்ப்பதுதான் ஒரு பேச்சாளனுடைய ஆற்றல் என்பதை நான் நன்கு அறிவேன் எனக்கூறிய வைகோ, அதற்கு முன்னதாக தான் கூறிக்கொண்டிருந்த அர்ஜுனன் கிளி கதையைத் தொடர்ந்தார். 

 வில்லுக்கு விஜயன் காண்டீபரை அழைத்து அர்ஜுனா உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது? ஆச்சாரியாரே என் கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை. நான் தொடுத்திருக்கிற வில்ல அன்பின் நுனியும் குருவியின் கழுத்தும் மட்டும்தான் என் கண்ணுக்கு தெரிகிறது என்று சொன்னார். அதைப்போல என் தம்பிமார்களே திமு கழகத்தினரை பார்த்து சொல்லுகிறார் அண்ணா என் தம்பிமார்களே உங்கள் கண்ணுக்கு வரப்போகிற தேர்தல் மட்டும்தான் தெரிய வேண்டும். 1967 தேர்தலில் நாம் பெற வேண்டிய வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். அதற்காக பணியாற்றுங்கள் என்று கூறினாரே, அதை போலத்தான் உங்களிடமும் உங்களுடைய கருத்தில் உங்களுடைய நெஞ்ச ஆழத்தில் கட்சியினுடைய அமைப்பை வலுப்படுத்துவதற்கு, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது முதல் நமக்கு நேசமாக இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக தோழர்களோடு பண்பாடான பக்குவமான அனுசரணையை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார். 

இதையும் படிங்க: முதல்வரையே கேலி பண்ணுவீங்களா? STOP IT விஜய்! வைகோ காட்டம்

இதையும் படிங்க: இதோட விடமாட்டேன்... ஆதரவாளர்களை திரட்டி... வைகோவுக்கு மல்லை சத்யா எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share