×
 

மக்களே உஷார்… மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீஸ் குவிப்பு…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழ்நாட்டின் மதுரை நகரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற புராதன இந்து கோவிலாகும். இது இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென்னிந்தியாவின் கோவில் கட்டிடக்கலை மற்றும் பக்தி மரபின் அற்புதமான எடுத்துக்காட்டாக இந்தக் கோவில் திகழ்கிறது. மதுரையின் இதயமாகக் கருதப்படும் இந்தக் கோவில், மீனாட்சி அம்மன் மற்றும் அவரது துணைவர் சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதன் வரலாறு, கட்டிடக்கலை, ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரப் பங்களிப்பு ஆகியவை இந்தக் கோவிலை உலகப் புகழ்பெற்றதாக ஆக்கியுள்ளன. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

இதையும் படிங்க: வெடிச்சு சிதறபோகுது... சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்… திருப்பரங்குன்றத்தில் பதற்றம்…!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மோப்ப நாய்களைக் போலீசார் தீவீர சோதனை நடத்தினர். தொடர்ந்து முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: வெடிச்சு சிதற போகுது... ஹைகோர்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share