காலில் விழுந்ததை என்ன சொல்வீர்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் பதிலடி!
ராகுலை கனிமொழி சந்தித்தது குறித்துப் பேச எடப்பாடிக்குத் தகுதியில்லை என்று ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கானத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்திற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, திமுக எம்.பி கனிமொழி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸிடம் திமுக கெஞ்சுகிறது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்ததைக் கெஞ்சுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது நகைப்புக்குரியது. இரு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பது அரசியலில் இயல்பான ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். இ.பி.எஸ்-க்கு நேரடியாகச் சவால் விடுத்த ப.சிதம்பரம், கனிமொழி சந்தித்ததைக் கெஞ்சுவது என்றால், நீங்கள் டெல்லி தலைவர்களின் காலில் விழுந்ததை என்னவென்று சொல்வது எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நாகரிகமாக அணுக வேண்டும் என்றும், அடிப்படை ஆதாரமற்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை?” - 125 நாட்களுக்கு பிறகு ‘தளபதி’யை வம்புக்கு இழுத்த இ.பி.எஸ்!
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனம் மற்றும் அதற்குப் ப.சிதம்பரம் அளித்துள்ளப் பதிலடி ஆகியவை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள் நிலவும் சூழலில், ப.சிதம்பரத்தின் "காலில் விழுந்த" விமர்சனம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: “விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்!” புதுக்கோட்டையில் வீடு வீடாகச் சென்று விஜயபாஸ்கர் பிரச்சாரம்!