×
 

“இந்த 4 மாவட்ட கிராம சபை கூட்ட பட்டியல்களை உடனே தாக்கல் செய்யுங்க” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

திண்டுக்கல், விருதுநகர் உட்பட 4 மாவட்ட கிராம சபை கூட்டங்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை,திண்டுக்கல், விருதுநகர் உட்பட 4 மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்ற விபரங்களை தாக்கல் செய்ய அந்தந்த மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருச்சி துறையூரை சேர்ந்த குருநாதன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தில்  கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் போது, 7 நாளுக்கு முன்னதாக கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள், இடம் குறித்து  அறிவிப்பு வெளியிட வேண்டும். கிராம சபை கூட்டம் நடநடைபெறும் போது, கிராம மக்கள்  ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை  ஏற்க வேண்டும். இந்த பணிகளை அந்த பகுதியில் உள்ள வட்டாச்சியர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த  2018ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இருப்பினும் நீதிமன்ற உத்தரவு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. எனவே தமிழக கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, இயக்குனர் பி.பொன்னையா, திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகள் ஆய்வாளர் பிரதீப்குமார், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.சரவணகுமார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்கள்: ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடை..!!

இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எல்.விக்டோரியாகெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பான பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

 இது நம்பும்படியாக இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களின் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தங்கள் எல்லைக்குளம் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்ற ஊராட்சிகளின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது னெ உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 ஓட்டு... பதில் சொல்வாரா ஸ்டாலின்? பகீர் கிளப்பிய பாஜக

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share