×
 
☰

உச்சம் தொடும் மேகமலை விவகாரம்... விஜய் அரசுக்கு எதிராக ஒன்று திரளும் 3000 கிராம மக்கள்... போலீஸ் குவிப்பு...!

இந்தப் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில், கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலையத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக மலைகிராம மக்கள் அறிவித்துள்ள நிலையில், 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வருஷநாடு, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள 98 கிராமங்கள் மேகமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்களை தொடர்ந்து வெளியேறுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடமலை-மயிலை ஒன்றியத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வரும் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

இந்தப் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏடிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில், 6 டிஎஸ்பிக்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 55 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை, சிறப்பு காவல் படையினர் என 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், போராட்டம் நடைபெறும் பகுதியிலேயே சமைத்து சாப்பிட்டு, அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மேலும், தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடம் குறித்து மலைகிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தாங்கள் ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், இந்த நிலம் தங்களுக்கே உரியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தங்களை இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்றும், தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் அதே இடத்தில் தொடர்ந்து வசிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்காகவே இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். இதற்கு முன்பும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து அவர்கள் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: முடி வெட்டுனது குத்தமா..? எப்பவுமே நான் தான் டார்கெட்..! ஆதங்கத்தை கொட்டிய மேயர் பிரியா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share