52 ஆயிரம் பேர் மெக்கா செல்வதில் சிக்கல்.. தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஹஜ் பயணத்திற்கான மண்டல ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவது ஹஜ் பயணிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது ஹஜ் பயணிகளை பாதிப்படைய செய்யும் என்று குறிப்பிட்ட அவர், ஹஜ் ஏற்பாட்டளர்கள் மூலம் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் 52,500 பேர் மெக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உரிய கட்டணத்தை செலுத்தி ஒதுக்கீட்டை உறுதி செய்யவில்லை என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தாமதமாவதை காரணம் காட்டி 5 மண்டலங்களில் முதல் 2 மண்டலம் ஒதுக்கீடுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபோதையில் திமுகவினர் அராஜகம்..! எங்க இருந்து துணிச்சல் வருது..? அண்ணாமலை விளாசல்..!
எனவே, சவுதி அரேபியா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு சாமர்த்தியம் பத்தல... எள்ளி நகையாடிய ராஜேந்திர பாலாஜி...!