×
 

சுரங்கப்பாதையில் திக்... திக்...!! நடுவழியில் திடீரென நின்ற மெட்ரோ ரயில்... பீதியில் உறைந்த பயணிகள்..!

சென்னை செண்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுரங்கப்பாதையில் நின்றது. விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலானது காலை 6  மணி அளவில் திடீரென பளுதாகி நின்றதால் பயணிகள் பீதி அடைந்தனர். 

சென்னை மெட்ரோ ரயில் என்பது சென்னை நகரில் உள்ள ஒரு விரைவு போக்குவரத்து அமைப்பாகும், இது திங்கள் முதல் சனி வரை அதிகாலை 5:30 முதல் இரவு 11:00 வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:00 முதல் இரவு 10:00 வரையிலும் இயக்கப்படுகிறது. இது நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு இடையே விரைவான மற்றும் எளிதான பயணத்தை வழங்குகிறது. 

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது, இந்தியாவின் 4வது மிக நீளமான மெட்ரோ வலையமைப்பாகும். நகரின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பாக இருக்கும் சென்னை மெட்ரோ, அதிவேகமான, பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனால் மாதந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மெட்ரோ திட்ட நிராகரிப்பு..!! கோவையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி..!!

நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்: 

இன்று காலை சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் மெட்ரோ நிலையம் நோக்கி செல்லும் மெட்ரோ ரயில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ நிலைய பாதைக்கு நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நின்றிருக்கிறது. சுமார் 40 நிமிடமாக பயணிகள் மெட்ரோ ரயில் உள்ளே தவித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக காலை 5:00 மணியிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிலையம் இயங்கி செயல்பட்டு வருகிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ட்ரெயின் என்ற வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று காலை சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து விம்கோ நகர் மெட்ரோ நிலையம் நோக்கி செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ நிலைய சுரங்கப் பாதைக்கு நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதகி நின்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காலையில் பயணித்த பயணிகள் 40 நிமிடங்களாக மெட்ரோ ரயில் உள்ளே இருந்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் 40 நிமிடங்களாக சரி செய்யப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு தொழில்நுட்பம் சரி செய்யப்பட்டு மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டிருக்கிறது. 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த மெட்ரோ ரயில்,  சுரங்கபாதையில் திடீரென உள்ளே இருந்த பயணிகள் நின்றதால் பயமும், பதற்றமும் அடைந்தனர். இருப்பினும், மெட்ரோ நிலைய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 40 நிமிடத்திற்குள் மெட்ரோ ரயிலை மீண்டும் இயக்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. 

இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share