×
 

பூந்தமல்லி டூ போரூர்.. நாளை மறுநாள் 3ம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!

பூந்தமல்லி, போரூர் இடையே நாளை மறுநாள் 3ம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தவே விரும்புகின்றனர். மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படுகிறது. 

தற்போது ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களுக்கு என தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விரைவில் பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடம்... கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு!!

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வரும் டிசம்பரில் பூந்தமல்லி- போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி இந்த வழித்தடத்தில் முதற்கட்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து இதே வழித்தடத்தில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது 3ம் கட்டமாக பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதிலும் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்.... ஆனா இது கட்டாயம் இருக்கனும்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share