கனல் கண்ணனை துன்புறுத்தக் கூடாது.. முன்ஜாமின் வழக்கில் உயர்நீமன்ற மதுரைக் கிளை உத்தரவு..
திருப்பரங்குன்றம் மலை வழக்கில் கனல் கண்ணன் முன் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில் அவரை துன்புறுத்த கூடாது என உத்தரவிட்டு வருகிற 4 ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலையுடன் வாசகம் அடங்கிய பதிவை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக
மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில் கனல் கண்ணன் முன் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில் அவரை துன்புறுத்த கூடாது என உத்தரவிட்டு வருகிற 4 ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
சென்னல் மதுரவாயல் பகுதியை சேர்ந்த கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், நான் இந்து முன்னணி அமைப்பில் உள்ளேன். அறுபடை வீடு நமது என்று சொல்லி மீசைய முறுக்கு , இந்துக்களே புறப்படுவோம் , என்று திருப்பரங்குன்றம் மலையையுடன் ஒரு வாசகம் அடங்கிய பதிவை பாடலுடன் ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருந்தேன்.
இந்த பதிவு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் , மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது என கூறி என் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
என் மீது தவறான நோக்கத்துடன் பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் , எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் கால அவகாசம் கோரினர். இதை தொடர்ந்து, நீதிபதி வருகிற 4 ம் தேதி வரை மனுதாரர் கனல் கண்ணனை துன்புறுத்த கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்திற்கு சென்னையில் வேல்யாத்திரையா?.. தேவையில்லாமல் பிரச்சனை செய்வதா என நீதிமன்றம் கேள்வி..?