பிற மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!
சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி முன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள இந்த மனுக்களை அனுப்ப வேண்டும்.
பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து கனிம வள துறை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பார்வைக்கு அனுப்ப உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம்,மார்த்தாண்டம் விளவங்கோடு, லிபின் பொன்னுசுவாமி லீலா, கம்பம்,அருண் அரவிந்த், என்பவர் தாக்கல் செய்த மனுக்களில், நான் அனுமதி பெற்று கல் குவாரி நடத்தி வருகிறேன். இந்த சூழலில் வெளி மாநிலங்களுக்கு ஜல்லி கற்கள், உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே,பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்த கனிம வள இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ன மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தனுஷின் அரசியல் என்ட்ரிக்கு முன்னரே அலர்ட் ஆன விஜய் அரசு? உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு!
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி,திலீப் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில், சென்னை உயர்நீதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இது போன்றது ஒரு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்து நிலுவையில் உள்ளது.
என வாதிட்டார் .
அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கனவே இந்த வழக்கு இங்கு விசாரணையில் உள்ளது வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி முன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள இந்த மனுக்களை அனுப்ப வேண்டும்.எங்கு விசாரிப்பது என தலைமை நீதிபதி பரிசீலனை செய்ய , உத்தரவிட்டு இங்குள்ள மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க பதிவாளருக்கு உத்தரவிட்டார்,
இதையும் படிங்க: பட்ஜெட் விவாதம்... சட்டைப்பையில் ஸ்டாலின் படம்..! ஓபிஎஸை சீண்டிய அமைச்சர்கள்..!