×
 

திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களை பட்டியலிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் பட்டியலின மக்களின் நலன் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பேரவையில் காரசாரமான வாதப்பிரதிவாதத்திற்கு வழிவகுத்தது. திமுக உறுப்பினர்கள் தங்களது ஆட்சியில் அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டியதையும், சட்டக் கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டியதையும், பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கியதையும் சுட்டிக்காட்டி தங்களது சமூக நீதிப் பங்களிப்பை எடுத்துரைத்தனர்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, அத்தகைய அறிவிப்புகளும் சின்னச் சின்ன நடவடிக்கைகளும் போதாது என்றும், உண்மையான அதிகாரப் பகிர்வும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் பட்டியலின மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.அவர் தனது பேச்சில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்ததாகவும், அதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள், பாகுபாடுகள் மற்றும் அட்டூழியங்கள் குறையவில்லை என்றும், அரசு அவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாகவும் வாதிட்டார். விவாதத்தின் போது ஆதவ் அர்ஜுனா, பட்டியலின மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு வேண்டும் என்றும், வெறும் அறிவிப்புகளால் மட்டும் அவர்களது வாழ்க்கை மேம்படாது என்றும் தெளிவுபடுத்தினார்.

திமுக ஆட்சியில் ஏற்பட்ட குற்றங்களின் அதிகரிப்பு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை இலக்கு வைத்த வன்முறைகள் குறித்து அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்பதே அவரது முக்கிய குற்றச்சாட்டாக அமைந்தது. இதனால் பேரவையில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும் ஆதவ் அர்ஜுனா தனது நிலையில் உறுதியாக இருந்தார். சமூகநீதி பேசக்கூடிய திமுக, போன ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. அது மத்திய அரசு செய்யும் என்றார்கள். பிற மாநிலங்களில் இது நடந்தது. எங்கள் அரசு தான் சமூகநீதி கணக்கெடுப்பை அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க: "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

பாஜக பெயரைச் சொல்லி தப்பிக்கக் கூடாது என்றார். 1999 முதல் 2004 வரை கருணாநிதி என்ன பேசினார் என்பதை நாங்களும் எடுத்துப் பேச முடியும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு சமூக இயக்கம் என்று சொன்னது இதே அவையில் தான். அதையும் நாங்கள் சொல்ல முடியும். கோத்ரா கலவரத்தின்போது நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். 1999 முதல் 2004 வரை பாஜக ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க திமுக முழு ஆதரவு அளித்தது. எங்களுக்கும் வரலாறு தெரியும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாறைக்குழிகளில் டன் கணக்கில் குப்பைகள்..! துணிவில்லாத அரசு... கொந்தளித்த சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share